Thursday, February 25, 2016

Ogam - (Yoga) The Orgins of Ogam date back to over 5000 and more years ago in Ancient Tamil Nadu


More than 5,000 years ago, "Ogam" started its journey as an ancient Tamil Nadu science of exercise and healing, passed along from teacher to student through oral tradition and physical practice.
Ogam is also known as one of the oldest holistic health care systems, not just because of its fundamental healing approach, but also because of its many benefits for physical, mental and spiritual wellbeing.
What is Okam?
The word “Okam” is from the Tamil Language, okam means unique understand inner and outer knowledge like a Body, Sathi, Life and Soul. Knowledge person known in existence with God, When the individual person understand keep practice own life in okam, they will understand real nature, the person will get highest consciousness and increase inner, outer quality.
Okam (yoga) = body + Sathi (energy) + life + soul
Thirumoolar [Tamil:திருமூலர்] was a great Tamil Shaivite mystic. He is considered one of the 63 Nayanars and one of the 18 Siddhars. His magnum opus, Thirumandhiram (Tamil:திரு மந்திரம்) is the tenth thirumurai in the Tamil Shaivaite Panniru Thirumurai. It deals extensively with Yoga and is also called Chathiram. It consists of over three thousand verses dealing with various aspects of spirituality, ethics and the praise of God Shiva. Thirumandiram is the first known Tamil work to use the term Shaiva Siddhanta and the earliest known exposition of the Shaiva Agamas in Tamil. It brings out the differences between Vedanta and Siddhanta.
The deep inner meanings of the mantras may be learnt only from a Guru.
We shall consider here a sample verse where the meaning is apparently clear:
Yaavarkkum aam Iraivarkku oru pachilai
யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
Yaavarkkum aam pasuvukku oru vaayurai
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
Yaavarkkum aam uNNum podu oru kaipidi
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
Yaavarkkum aam pirarkku innurai thanE
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே. [தி. 252]
All can [offer] a green leaf in worship to God
All can [offer] a mouthful of grass to the cow
All can [offer] a handful, sitting down to eat
All can [offer] sweet and kind words to others
All people want to be happy, healthy, peaceful, free from sorrow and free from all strains.
Saint Thirumoolar says that all can achieve these by doing just four simple things:
1. always offer a green [bilva] leaf to God with prayerful attitude
2. always offer a mouthful of grass to a cow with compassion
3. always offer a handful of food to the hungry, when eating and
4. always offer sweet and kind words to all in need of them.
What a simple solution! What a profound result!


ஓகம் (யோகம்)

ஓகக் (யோக) கலை

ஓக இருக்கை (யோகாசனம்)

5000 ஆண்டுகளுக்கு முன் பண்டைய தமிழகத்தில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை ஓகக் (யோக) கலை ஆகும். அதில் ஓக இருக்கை (யோகாசனம்) குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.

ஓகம் என்ற சொல் தமிழ்ச் சொல் ஆகும். "ஓகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.

ஆசனம் என்ற சொல்லுக்கு 'இருக்கை' என்பது பொருள். உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தமிழில் இதை ஓக இருக்கை என்றழைக்கலாம்.

யோக்என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில்ஓகம்என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம்.

நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்துகொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாகக் கையகப்படுத்திக்கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக்கொண்டது. ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் அறிவியல் மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக் (யோக) கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்தஓகக்கலை”. இந்தக் கலை முழுவதும் சமற்கிருத மயமாக்கப்பட்டிருக்கிறது

யோகா, யோகாசனம், அத யோகம், இராச யோகம் என்றெல்லாம் வடமொழியாகவே இருக்கிற இந்தக்கலை, நமது தமிழரின் அரிய கலைச்செல்வம், பரம்பரச் சொத்து என்று நிறுவுகிறார் அசித்தர்

"யோக்" என்பது வடமொழிச் சொல். அதுவேதான் ஆங்கிலத்திலும் யோகா என்றாகியது. ஆனால் நம்முடைய தமிழில் "ஓகம்" என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம். நெடுங்காலமாக இங்கே புதிர் ஒன்று நடந்து கொண்டு இருக்கிறது. நம்முடைய கலைகளை வடமொழி தனதாக கையகப்படுத்திக் கொண்டு மாற்றியமைத்து, திரித்து, தனது போலவும், இவற்றினுடைய மூலமே தங்களது போலவும் தமிழர்களிடம் உள்ள எல்லா நல்லவற்றையும் களவாடிக் கொண்டது.

ஓகம் என்றால் முயற்சி, வினை, பாடு, கடினம், உழைப்பு, இது போன்ற பல்வேறு பொருட்கள் உண்டு. ஓகம் என்பதற்கு இணையான இன்னொரு சொல் தவம்.

ஓக வழிபாடு

உலகு என்னும் சொல்லின் அடியாகப் பிறந்ததே ஓகம் எனும் சொல்லாகும். ஒன்றித்தல் - ஒன்றுதல், ஒருக்குதல் எனபதுதான் அதன் கருத்து மூலம்.
உகு > ஒகு > ஒக்கு
ஒக்கு + தல் > ஒக்குதல் = ஒத்தல், ஒத்திருத்தல், ஒன்றாதல், ஒருமித்தல்.

உகு > ஒகு > ஓகு > ஓகம் = பொறி புலன்கள், மனம் முதலிய கரணங்கள் போன்றவற்றால் அமைந்த மெய்க்கூறுகளின்வழி வெளிமுகமாக உயிர்ப்பையும் ஆற்றலையும் வீணடிக்காமல் உள்முகமாகத் திருப்பி ஒருக்குவது ஓகம்.

ஓகம் எனும் கருத்தைச் சற்றும் மாறாமல் கொண்டுள்ளதைக் காண்க. இந்த ஓகு > யோகு எனவும் சொல்லப்படும். வடவர் நூள்களில் இந்த செந்தமிழ்ச் சொல்லை யோகம் > யோகா எனத் திரித்துக் கூறுவர்.

ஓகப்பயிற்சியை இருந்துசெய்யும் இருப்புநிலைகள் உள்ளன. அவற்றை இருக்கை, ஆதனம் () ஆசனம் என்பர். ஆசனங்களைக் கொண்டமையும் பயிற்சி என்பதால் அதனை ஓகாசனம் ( யோகாசனம்) என்பர். அது எட்டுவகைப் பயில்வுமுறைகளைக் கொண்டது. ஆகையால், எட்டங்க ஓகம் எனப்பெறும். அது வடநூல் புணர்ச்சியில் அஷ்டாங்க யோகம் எனப்படும்.

தமிழர்களின் ஓகக் கலையை மீட்போம்!

தமிழ்ச் சித்தர்கள் உலகிற்கு வழங்கிய ஒப்பற்ற ஓகக்கலைகளின் தமிழ்ப்பெயர்களை அறிவோம்!!

இத்தனை காலங்கள் நம்முடைய கலைகளை வடநாட்டு ஆரியர்கள் சமஸ்கிருத பெயர் சூட்டி அவர்கள் கலைகளாகவே மாற்றினர். தமிழகத் தமிழர்களும் இந்த ஓகக் கலைகள் யாவும் தமிழர்களுடைய கலைகள் அல்ல அவை ஆரியக் கலைகள் என்றே நம்பி வந்தனர். அதனால் இக்கலைகளின் தமிழ்ப் பெயர்களை மீட்க எந்த நடவடிக்கையும் தமிழ் ஆசிரியர்களே எடுக்க வில்லை என்பது வேதனையான விடயம். மேலும் சமஸ்கிருத மொழியில் ஓகக் கலைகளை சொல்லிக் கொடுப்பது தான் மேன்மையான அறிவு என்றும் கருதினர் சில தமிழ் ஆசான்கள்

தமிழில் சொல்லிக் கொடுத்தால் அது எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்வார்கள் அதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படும் என்றும் சிலர் கருதினர். ஆரியர்களும் அவ்வாறே புரியாத மொழியில் ஓகக் கலைகளை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வந்தனர். அதனால் ஒட்டுமொத்த ஓகக் கலைகளுக்கும் தாங்கள் தான் உரிமைதாரர்கள் என்றும் கூறிவருகின்றனர் ஆரிய மதத்தினர்

இந்நிலையில் தமிழ்நெறி வாழ்வியல் ஆசான் திரு. குப்பு அசித்தர் தமிழர்களின் ஓகக் கலைகளின் பெயர்கள் முழுவதையும் இப்போது மீட்டு நமக்கு தந்துள்ளார் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். தமிழர்கள் யாவரும் இனி ஓகக் கலைகளை தங்கள் தாய்மொழியிலேயே எளிதில் பயிலலாம். இக்கலைகள் குறித்த ஐயங்களை திரு குப்பு அசித்தர் அவர்களை தொடர்பு கொண்டும் தெளிவடையலாம்.

ஓக இருக்கைகளின் தமிழ்ப் பெயர்களுக்கு இணையான பிற மொழிப் பெயர்கள் பட்டியல்

தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்


1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமசுகாரம் - SALUTE TO THE SUN 
2.
ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்- ஏகபாத சூரிய நமசுகாரம் - SALUTE THE SUN ON ONE LEG
3.
அரை நிலாவிருக்கை - அர்த்த சந்திராசனம் - CRESCENT POSTURE 
4.
மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE 
5.
மலை நிமிர்வு இருக்கை - தாடாசனம் - MOUNTAIN ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS

6. தாமரை இருக்கை - பத்மாசனம் - LOTUS POSTURE 
7.
எழும்பு தாமரை இருக்கை - உத்தித பத்மாசனம் - RAISED LOTUS POSTURE 
8.
பூட்டிய தாமரை இருக்கை - பத்த பத்மாசனம் - LOCKED LOTUS POSTURE 
9.
நாணல் முதுகு இருக்கை - பச்சிமோத்தாசனம் - BACK ERECTING POSTURE 
10.
மரவிருக்கை - டோலாசனம் - TREE POSTURE 

11. மூங்கில் வளைவு இருக்கை, கை கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE

விலங்கு - CREATURES
நீர் உயிரிகள் - AQUATICS

12. தவளை இருக்கை - பெக்காசனம் - FROG POSTURE 
13.
மீன் இருக்கை - மச்சாசனம் - FISH POSTURE 
14.
சுறவம் இருக்கை - மகராசனம் - SHARK POSTURE 
15.
முதலை இருக்கை - மக்கராசனம் - CROCADILE POSTURE 

16. சங்கு இருக்கை / 
உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE 
17.
ஆமை இருக்கை - கூர்மாசனம் - TORTOISE POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE

ஊர்வன - REPTILES

19. தேள் இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION POSTURE 
20.
பாம்பு இருக்கை - புசங்காசனம் - SERPENT POSTURE 

நடப்பன - VERTEBRATE

21. ஆமுகவாய் இருக்கை - கோமுகாசனம் - COW FACE POSTURE
22.
ஆவினிருக்கை - கோவாசனம் - COW POSTURE
23.
பூனை இருக்கை - பில்லியாசனம் - CAT POSTURE
24.
ஒட்டகவிருக்கை - உசர்ட்டாசனம் - CAMEL POSTURE 
25.
நாய்முக இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG FACE POSTURE 

26. புலி இருக்கை - வியாகராசனம் - TIGER POSTURE 
27.
அரிமா இருக்கை - சிம்மாசனம் - LION POSTURE 
28.
மிடுக்கான குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRA
29.
முயல் இருக்கை - சசாங்காசனம் - RABBIT POSTURE 
30.
நரி இருக்கை - மார்சரி ஆசனம் - FOX POSTURE

பறப்பன - AVES & INSECTS

31. வெட்டுக்கிளி இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER (LOCUST) POSTURE 
32.
அரை வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI GRASSHOPPER POSTURE
33.
மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE 
34.
புறாவிருக்கை - கப்போட்டாசனம் - DOVE POSTURE 
35.
பறக்கும் புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE

36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE 
37.
ஒற்றைக்கால் கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE 
38.
கலுழன் இருக்கை - கருடாசனம் - EAGLE POSTURE 
39.
சேவல் இருக்கை - குக்குடாசனம் - COCK POSTURE 
40.
நிற்கும் மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE 

41. வாத்து இருக்கை - அம்சாசனம் - DUCK POSTURE
நடனம் - DANCE
42.
நடன இருக்கை - நடனாசனம் - POSTURE OF NATARASA 
43.
களிக்கூத்து - ஆனந்த தாண்டவம் - PLEASURE DANCE POSTURE
44.
கூத்தரசன் இருக்கை - நடராச ஆசனம் - KING OF DANCE POSTURE 
45.
வீர அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE

1முத்திரை - GESTURE

46. ஓக முத்திரை - யோகமுத்ரா - OGAM GESTURE 
47.
பெரு முத்திரை - மகாமுத்ரா - GREAT GESTURE 
48.
படையல் முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE GESTURE 
49.
குதிரை மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE 
50.
ஆறுமுக முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON GESTURE

கருவிகள் - TOOLS
51. நாற்காலி இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR POSTURE 
52.
அரசரிருக்கை - பூரண உட்கட்டாசனம் - THRONE POSTURE 
53.
சக்கரவிருக்கை - சக்ராசனம் - WHEEL POSTURE 
54.
அரைசக்கரவிருக்கை - அர்த்தகடி சக்கராசனம் - SEMI WHEEL POSTURE
55.
வில்லிருக்கை - தனுராசனம் - BOW POSTURE

56. காதருகுவில்லிருக்கை - ஆகர்ண தனுராசனம் - EXTENDED BOW POSTURE 
57.
படகிருக்கை / நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT POSTURE
58.
முக்கோணவிருக்கை - திரிகோனாசனம் - TRIANGLE POSTURE 
59.
பரிமாற்ற முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE 
60. கலப்பை / ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH POSTURE

தொழில் - ACTIVITIES

61. வழிபாட்டிருக்கை - சசாங்காசனம் - WORSHIP POSTURE
62.
வீரவிருக்கை - வீராசனம் - BRAVE POSTURE
63.
நெற்றிக்கண் வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE
64.
அம்மி அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE
65.
காலணிதையலிருக்கை - பத்ராசனம் - SHOEMAKER POSTURE

66. தேரோட்டி இருக்கை - சாரதாசனம் - CHARIOT RIDER POSTURE
67.
தலை முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும் இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL U POSTURE , MAKING GARLAND POSTURE.

உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY

68. இணை காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL FOOT POSTURE
69.
ஒரு காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70.
கோண இருக்கை - கோணாசனம் - ANGLED POSTURE

71. விலாப்பக்க கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72.
மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE
73.
மழலை இருக்கை - பாலாசனம் - CHILD POSTURE
74.
கிடைநிலை வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75.
குந்தி கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD

76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77.
மாற்று அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78.
பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE
79.
நீள்காலடி இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED FOOT ERECT
80.
ஓகத்துயில் - யோக நித்ரா - OGAM SLEEP

81. அரை உடல் இருக்கை - விபரீதகரணி - HIP STAND POSTURE
82.
முழு உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER STAND
83.
பாதி முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84.
மேடை இருக்கை - பீடாசனம் - STAGE POSTURE
85.
பகுதலை இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI INVERTTED 
86.
தலை இருக்கை - சிரசாசனம் - INVERTTED POSTURE

தூய்மை - CLEANSING

87. வளிகழித்தலிருக்கை - பவன முக்தாசனம் - WIND RELEASING TECHNIQUE
88.
வளி எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89.
குடல் சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL CIRCULATING POSTURE
90.
மூச்சொழுக்கம் - பிராணாயாமம் - ORDER OF BREATH

91. தலை தூய்மை - கபாலபாதி - CLEANSING OF BRAIN
92.
துருத்தி மூச்சு - பசுதிரிகா - BELLOW BREATH
93.
சீழ்க்கை - சீத்காரி - WHISTLING
94.
நீர்த் தூய்மை - சலநேதி - WATER CLEANSING
95.
குளிர் சீழ்க்கை - சீத்தளி - COOL WHISTLE

96. மூலக்கட்டு - மூலபந்தம் - ANAL CONTRACTION
97.
நாடித் தூய்மை - நாடி சுத்தி - CLEANSING OF PULSE
98.
தேனீ ஒலி - பிராமரி - HONEY BEE HISSING
99.
கண் தூய்மை - திராடகா - EYE CLEANSING
100.
பல்லிடுக்கில் காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING THROUGH CLEANCHED TEETH

101. உள் மூச்சு - அனுலோமம் - INHALING
102.
வெளி மூச்சு - விலோமம் - EXHALING
103.
தொண்டை ஒலி - உச்சயி - HISSING OF PHARYNX

நிறைவு நிலை - PACIFICATION

104. இயல்பிருக்கை - சுகாசனம் - AT EASE POSTURE
105..
அமைதி இருக்கை - சவாசனம், - LYING RELAX POSTURE
-Proud to be Tamilan

No comments:

Post a Comment